சைக்கிளில் ஜாலியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று கடித்துக் குதறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெரும்பாலான வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வருகின்றனர். அதுவே தெரு நாய்களும் அதிக அளவில் இருப்பதால் சிறுவர்கள் சாலைகளில் செல்லும்போது பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக சேர்ந்து கடித்த வீடியோ வைரலான நிலையில் அடுத்ததாக ஒரு புதிய வீடியோ வைரலாகியுள்ளது. சைக்கிளில் வந்த சிறுவனை நாய் கடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
A boy sitting on a bicycle was attacked by a dog in Arakkinar (Kozhikode) of #Kerala. This video is on #Viral #socialmedia. pic.twitter.com/5LhajPL2ev
— Siraj Noorani (@sirajnoorani) September 13, 2022
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் திடீரென சிறுவனை கடித்து இழுத்தது. இதனால் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிறுவன் அலறியும் சில நிமிடங்கள் வரை நாய் அவரை விடாமல் கடித்தது.இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நாய் அதே பகுதியை சேர்ந்து நான்கு பேரை ஒரே நாளில் கடித்துள்ளது. இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.