ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை நாட்டில் அதிக உச்சத்தை தொட்டு வருகின்றது. பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பின் இருக்கும் மக்கள் இது போன்ற விலை உயர்வின் காரணமாக மேலும் கஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆட்டோ, லாரி, டாக்ஸி மற்றும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர்.
இந்த விலை உயர்வுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை திரிஷா மறைமுகமாக பெட்ரோல் விலை உயர்வுக்கு விமர்சனம் செய்துள்ளார். இப்போது காரில் செல்லும் திரிஷா, தற்போது சைக்கிள் ஓட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு நல்ல மனநிலையில் இருந்து ஒரு சவாரி செய்ய சைக்கிளை பயன்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளார்.