செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது. இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே, தினமும் முதலமைச்சர் காலையிலே எந்திரிக்கிறார் 4 இடத்தைப் பார்க்கிறார். டீயை குடிக்கிறாரு வீட்டுக்குப் போகிறார். வேறு என்ன சாதித்தார் ? சொல்லுங்க பாக்கலாம்… இல்லன்ன சைக்கிள் ஓட்டுவார்.
வேற என்ன சாதித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எட்டு மாத ஆட்சியில் என்ன திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசில் நான் முதல்-அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்கள் முடிவு பெற்று அந்த முடிவுற்ற பணிகளை தான் இப்பொழுது திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
நான் முதலமைச்சராக இருந்தபொழுது அம்மாவின் உடைய அரசு போடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு அந்த அரசாணையின்படி தான் இன்றைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது எந்த திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார், எதுவுமே கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் 75 கூட்டு குடிநீர் திட்டத்தை நாங்க நடைமுறைக்கு கொண்டு வந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு எடப்பாடியிலேயே எடுதுகொங்கள்…. உதாரணத்திற்கு எடப்பாடியை எடுத்துக்கோங்க…. நகரத்துக்கு என்று புதிய திட்டத்தை 20 கோடி ரூபாயில் கொண்டு வந்து நிறைவேற்றி, இன்றைக்கு தங்கு தடை இல்லாமல் 30 வார்டுகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீரை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் மேச்சேரி நங்கவல்லி கூட்டு குடிநீர் திட்டம் அதையும் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு,
நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் அம்மாவுடைய அரசு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் மேச்சேரி ஒன்றியம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்கெல்லாம் இந்த தங்கு தடை இன்றி கொடுத்துட்டு இருக்கோம். அதேபோல இன்றைக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு எடப்பாடி ஒன்றியம்,
கொங்கணாபுரம் ஒன்றியம், மகுடஞ்சாவடி ஒன்றியம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றிய மக்களுக்கு நிலையான பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் நாங்கதான் கொடுத்துட்டு இருக்கோம். அதுபோல் நம்முடைய வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அங்க கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்தது அண்ணா திமுக அரசுதான். இப்படி பல திட்டங்களை அறிவித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தானே ஒழிய திமுக அரசாங்கம் இல்ல, 10 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியிலே இல்ல என தெரிவித்தார்.