கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அருகே தாமரச்சேரி பரப்பண்போயிலை பகுதியில் ஷாஜி என்பவர் தனது மனைவி பினியா மற்றும் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பற்றி ஷாஜி மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். பலத்த காயமடைந்த குழந்தையும் தாயும் தற்போது மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது.
மகள் சைக்கிள் கேட்டபோது முதலில் தன்னால் வாங்கித் தர முடியவில்லை என்று கூறியுள்ளார். மீண்டும் கேட்டபோது கன்னத்தில் அறைந்து அம்மாவின் குடும்பத்தாரிடம் கேட்க சொல்லியதோடு வீட்டை விட்டு வெளியே போகாவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். பிறகு மாலையில் வீடு திரும்பிய ஷாஜி, மகளின் உடலில் கொதிக்கும் நீரை ஊற்றியதோடு கையையும் உடைத்துள்ளார். மேலும் மனைவியின் முகத்திலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.