சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மட்டங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை நோக்கி வேகமாக சென்ற லாரி ராஜேந்திரனின் சைக்கிளின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.