சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீடியோ கேம் தான் விளையாடுகிறார்கள் அதிகமாக அது அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. அவர்களை எப்படி மாற்றுகிறது என்று சில சம்பவங்கள் நடந்ததை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..!!
சம்பவம் 1 :
ஆஸ்திரேலியாவில் லிஸ்டோர்ன் நகர் காவல் நிலையத்திற்கு லிஸ்ட் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய பெண் என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல வருகிறான் என்று கத்துகிறார்.அதற்கு காவல் அதிகாரி யார் கொல்ல வருகிறார் என்று கேட்க, என் மகன் கொல்வதற்கு கத்தியுடன் துரத்தி வருகிறான் என்று கூறியதும் காவல் நிலையம் அதிர்ச்சியானது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடிக்கிறார். காயங்களுடன் இருந்த அந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் விசாரணையில் அந்த தாய் கூறியது என்னவென்றால் அவரது 15 வயது மகன் தினமும் பல மணி நேரங்கள் வீடியோ கேம் விளையாடி கொண்டிருப்பதாலும், படிப்பில் கவனம் செலுத்தாதாதலும், அவனை அடிக்கடி கண்டித்து வந்ததாகவும் தெரிவித்தார்.
அன்றைய தினம் அவன் வீடியோகேம் விளையாடிக் கொண்டிருந்தபோது தான் மீண்டும் கண்டிப்பதாகவும், அதனை வெறுத்து அவன் திடீரென வெறி பிடித்தது போல் சமையலறைக்குள் நுழைந்து கத்தியை எடுத்துக்கொண்டு தன்னை கொல்ல வந்ததாகவும் கூறி அழுதிருக்கிறார்.
சம்பவம் 2 : டெல்லி:
ஆஸ்திரேலியா சம்பவத்தில் அந்த தாய் பிழைத்துக் கொண்டாள். ஆனால் இந்த டெல்லி சம்பவத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டான் ஒரு பள்ளி மாணவன். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பப்ஜி கேம் க்கு அடிமையாகி பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் பெற்றோர்களையும் ஏமாற்றிவிட்டு அந்த நகரிலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நண்பர்கள் சிலரோடு சேர்ந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த விஷயம் அவனது சகோதரிக்கு தெரிந்து அதன் மூலம் அவனது பெற்றோருக்கு தெரிந்து அவனை கடுமையாக கண்டிக்கின்றனர். கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவனது மொபைலையும் வாங்கி வைத்து விட்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவன் வீட்டை விட்டு வெளியேறி நேராக தனது நண்பரின் அறைக்கு சென்று அவர்களுடன் கூடிப்பேசி ஒரு ரவுடியை சந்தித்து ஒரு கத்தியை வாங்கி மறைத்து மறைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டில் உள்ள அனைவருடனும் சேர்ந்து இவனும் உறங்கச் சென்று விட்டான். அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று எழுந்த அவன் முதலில் தனது தந்தையை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, அடுத்ததாக தாய் என்றும் பார்க்காமல் வெறித்தனமாக தனது தாயையும் குத்திக் கொண்டு இருக்கிறான். பின்னர் சகோதரியின் பக்கம் திரும்பி அவன் என்னை காட்டிக் கொடுத்தது நீதானே என்று கத்திக்கொண்டு சகோதரியையும் குத்திக் கொன்றுவிட்டான்.
பப்ஜி விளையாட்டு என்பதே ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை ஒழிப்பது தான், தினமும் விளையாட்டில் ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்து, கொலை செய்து பழகிப்போன அவன் மூளை இன்று நிஜத்தில் பயங்கரத்தை செய்துவிட்டது. மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு இப்போது சிறையில் அனாதையாக இருக்கிறான்.
சம்பவம் 3 : அமெரிக்காவின் ஆஸ்டின் நகரம்:
பப்ஜி விளையாட்டில் அனைத்து எதிரிகளையும் கொன்று அழித்து விட்டு கடைசி வரை தன்னை காத்துக்கொள்பவரே வெற்றி அடைந்தவர். இவை அனைத்தையும் நிஜம் போலவே பாவித்து தனது உயிரை கடைசிவரை காத்துக்கொள்ள வெறித்தனமாக விளையாடுவதுதான் நடந்துகொண்டிருக்கும். விபரீதங்கள் அனைத்திற்கும் மூல காரணம் இப்படி வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, விளையாடு கொண்டிருப்பவரை எதிரிகள் யாராவது சுட்டுக் கொன்று விட்டால் அவ்வளவு தான் அவர்களால் அதை தாங்கி கொள்ளவே முடியாது.
பயங்கரமான உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். ஆஸ்டின் நகரில் ஒரு பொறியாளர் தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். ஒருநாள் அவரது 16 வயது மகனின் அறையிலிருந்து பொருட்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு, பொறியாளரும் அவரது மனைவியும் அறையின் கதவை திறக்கின்றனர். அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறான் அவரது மகன். உனக்கு என்ன ஆனது? என்ன பிரச்சனை.? என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் என்னை சுட்டு விட்டார்கள் நான் செத்து விட்டேன் என்று கூறியிருக்கிறான். ஒன்றும் புரியாமல் குழம்பி அவனது பெற்றோர்கள் மீண்டும் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் அவன் என்னை சுட்டு விட்டார்கள் நான் செத்துட்டேன் என்றே கூறி இருக்கிறான். அதோடு மட்டுமல்லாமல் தனது பள்ளி வகுப்பிலும் தன்னை பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் இரண்டு மூன்று நாட்களாகவே என்னை சுட்டு விட்டார்கள் நான் செத்து விட்டேன் என்று புலம்பியபடியே இருந்திருக்கிறான்.
மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவன் என்னை சுட்டு விட்டார்கள் நான் செத்து விட்டேன் என்று புலம்பியபடியே அவர்கள் குடியிருந்த 15 மாடியில் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான் வீடியோ கேம் உலகின் விபரீதமான சம்பவங்கள் இன்னமும் இருக்கின்றன.