பிரபல நடிகை மீரா மிதுன் சைக்கோ போல் மாறி வருகிறார்.
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தான் அழகாக இருப்பதாகவும் தன்னை வர்ணித்து பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார் நடிகை மீரா மிதுன். இவர் நடிகர் நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பல பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றார். சில அவதூறு கருத்துக்களால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கின்றார். அப்போதும் அடங்காமல் பல மோசமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இதைப் பார்த்தவர்கள் இவருக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது என வெளிப்படையாக கூறி வரும் நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் மீராமிதுன், “நான் எங்கு சென்றாலும் என்னை சைட் அடிக்கிறார்கள். அழகா பொறந்தது என் தப்பா என்றெல்லாம்” ஏதோ உலறியப்படியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்களை கொந்தளித்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இவரின் இந்த செய்கையால் சினிமா உலகில் உள்ளோருக்கு கெட்ட பெயர் எழுந்திருக்கின்றது. ஆனால் இதற்கும் அடங்காத மீராமிதுன் வழக்கம் போல் தன்னை புகழ்ந்து கொண்டு சைக்கோவாக மாறி வருகின்றார்.