Categories
உலக செய்திகள் தற்கொலை

சைக்கோ கில்லரின் 13 வயது மகள்…. நானும் அம்மா போல் மாறிடுவேனா….? தற்கொலைக்கு முயன்ற சிறுமி…!!

13 வயது சிறுமி தனது அம்மாவின் கொடூர செயலைக் கண்டு தானும் அவர்களை போல் மாறி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரு பெண்களில் ஒருவர் Joanna dennehy, இவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படுகிறார்.2013ல் 10 நாட்களுக்குள் 3 பேரை கொடூரமாக ஜாம்பி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதேபோன்று கொலைகளை செய்து அந்த சடலத்தை ஏதாவது ஒரு குழியில் வீசி சென்றுவிடுவார். ஆனால் இவரிடம் கத்திக்குத்து பட்ட இரண்டு நபர்கள் பிழைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இவரை 2014ஆம் ஆண்டு கைது செய்து இவருக்கு வாழ்நாள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இவரிடம் விசாரித்ததில் ஒவ்வொரு கொலை செய்யும் போதும் தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அதில் ஒரு fun கிடைக்கிறது என்பதற்காகவும் செய்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இச்சமயத்தில் Joanna dennehy க்கு 5 வயதில் shianne treanor என்ற பெண்குழந்தை இருந்துள்ளது. Shianne treano-க்கு தற்போது 13 வயது ஆகியுள்ள நிலையில் தன் அம்மா செய்த கொடூரமான கொலைகளை பற்றி கேட்டவுடன் மயங்கி விழுந்து விட்டார்.

அக்குழந்தை விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி நானும் என் அம்மாவைப் போல் மாறி விடுவேனோ என்பது தான். இதையே யோசித்துக்கொண்டிருந்தார் குழந்தை ஒரு சமயத்தில் நாமும் தன் அம்மாவைப் போல ஒரு சீரியல் கில்லர் ஆக மாறி விடுவோம் என்று நினைக்க ஆரம்பித்துள்ளார். அப்படி நான் மாறினால் யாருக்காவது ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என்று நினைத்த அந்தக் குழந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து மனநல மருத்துவர்கள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |