நடிகர் துல்கர் சல்மானின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சார்லி, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார்.
My next project with Balki will have Dulquer Salman.
Its a psychological thriller .
Eagerly waiting to start work.#RBalki@dulQuer pic.twitter.com/g0C7AKHoMf— pcsreeramISC (@pcsreeram) May 25, 2021
இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துல்கர் சல்மானின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகும் சைக்கோ திரில்லர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் . இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.