மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள “சைக்கோ” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் போன்றோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தபடத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது.
சில காரணங்களால் படம் இந்த மாதம் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.