நடிகை சமந்தாவும் அவரது கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட தொடங்கினர். குறிப்பாக சமந்தாவை அதிகளவில் விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமந்தா குறித்து அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவுகளை சமூக வலைத் தளத்தில் பதிவிட வேண்டாம் என்று சமந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த நாகசைதன்யாவுடன் புகைப்படங்களை நீக்கியுள்ளார். சமந்தாவின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.