Categories
தேசிய செய்திகள்

சைபர் கிரைம்…. 24 மணி நேரத்திற்குள்…. “1930”- க்கு போன் பண்ணுங்க….!!!!

கடந்த சில நாட்களாக சைபர்கிரைம் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சைபர் கிரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்தில் தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1930என்ற எண்ணில் புகார் அளித்தால் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். மேலும் https://cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலும் காவலன் செயலி வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Categories

Tech |