Categories
அரசியல் தேசிய செய்திகள்

சைலஜா டீச்சர் நீக்கப்பட்டதற்கு…. காரணம் இது தான்…. உண்மையை உடைத்த பினராயி விஜயன்…!!!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சி வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் அமைச்சரவையில் அமைச்சர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலாஜா டீச்சர் நீக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வருடம் கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயலாற்றி வந்ததற்காக பெரும் பாராட்டுகளை பெற்றவர். உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டப்பட்டவர். எனவே இவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சைலஜா டீச்சருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கு என்ன காரணம்? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.

அதில், சைலஜா டீச்சருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கு காரணம் கட்சி எடுத்த முடிவு தான் என்றும், யாரையும் தொடர்ந்து 2 முறை அமைச்சராக நியமிக்க கூடாது என்றும் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. எனவே இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் முடிவிலிருந்து இவருக்கு மட்டும் விலக்கு கொடுக்க முடியாது என்றும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களும் சிறப்பாக திறம்பட செயல்படுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |