சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மக்கள் பெரு அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒருசில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் புகை பிடிப்பவர்களுக்கும், சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு வாய்ப்பு குறைவு உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் அவர்களது உடலில் குறைந்த செரோபாசிட்டிவிட்டி இருப்பதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆய்வில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.