சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் புகை பிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அவர்களது உடலில் குறைந்த செரோபாசிட்டிவிட்டி இருப்பதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆய்வில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.