சொகுசு காரில் வைத்து 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிகுந்தமிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே 28 ம் தேதி அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்ட இருக்கின்றார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி கூட வந்த ஐந்து சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றி இருக்கின்றன. அதன்பின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். மேலும் கூடுதலாக கிடைத்துள்ள தகவலின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவன் எம்எல்ஏ மகன் என்பதும், மற்றொருவன் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18 வயது இளைஞரை ஜூன் மூன்றாம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மற்றும் நான்கு பேருக்கும் எதிரான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் 48 மணி நேரத்திற்குள் அவர்கள் காவலில் எடுக்க படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிளப்பிற்கு வெளியில் இருந்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய மகளிர் ஆணையம் தெலுங்கானா போலீஸ் டிஜிபி கடிதம் எழுதியுள்ளது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று புகார்தாரர் சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஆணையம் கோரியுள்ளது.