Categories
மாநில செய்திகள்

சொகுசு கார் இல்லை…. கடுமையா உழைக்கிற மனுஷன்…. கிருத்திகா கண்ணீருடன் குமுறல்…!!!

பண மோசடி, ஆபாசபேச்சு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆபாச யுடியூபர் மதனின் மனைவி கிருத்திகா, என் கணவர் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் கடுமையாக பணியாற்றுகிறார். 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கிறார். தடை செய்யப்பட்ட விளையாட்டை என்னுடைய கணவர் விளையாடவில்லை. பப்ஜி விளையாடி கடந்த 10 ஆண்டுகளாக சொத்து சேர்க்கவில்லை, ஆடி கார் மட்டுமே எங்களிடம் உள்ளது. சொகுசு கார் எங்களிடம் இல்லை. என்னுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. வீட்டுசாவி காவல்துறையினரிடம் உள்ளது என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |