நடிகர் விஜய் பயன்படுத்திவரும் சொகுசு கார் மீதான இறக்குமதி வரியை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, திரையில் மட்டும் சமூக நீதிக்காக போராடுவது போல நடிகர்கள் இருக்கிறார்கள். வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது.
ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இந்தக் கருத்தை நீக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் விஜய். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.