பிரிட்டனில் முன்னாள் கால்பந்து வீரர், தன் காதலியை கடுமையாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
பிரிட்டனில் வசிக்கும் கோடிஸ்வரரான முன்னாள் கால்பந்து வீரர் ரயன் கிக்ஸ், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று கிரேட்டர் மேன்செஸ்ட்டர் பகுதியில் இருக்கும் 1.7 மில்லியன் மதிப்புடைய அவருடைய பிரம்மாண்ட சொகுசு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது முன்னாள் காதலியான கேட் கிரிவில்லி என்பவரும் அவருடன் இருந்துள்ளார்.
அப்போது ரயன், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அங்கு கேட்டின் சகோதரியும் இருந்துள்ளார். அவரையும் ரயன் தாக்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் அங்கு சென்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அதன்பின்பு ரயனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்குகள் மட்டுமல்லாமல் கடந்த 2017 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை கொடூரமாக மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட்டது தொடர்பாக மற்றொரு வழக்கும் அவர் மீது பதிவாகியுள்ளது. இந்நிலையில் ரயன் 28ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்காக ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.