Categories
தேசிய செய்திகள்

சொகுசு விடுதியில் சூதாட்டம், மது விருந்து…. பாஜக எம்.எல்.ஏ கைது…!!!

குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்ச்மஹால் காவல் எல்லைக்குட்பட்ட விடுதி ஒன்றில் சூதாட்டம் மற்றும் மதுவிருந்து நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கேசரிசிங் சோலங்கி உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர்

Categories

Tech |