சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த தொழில் மாநாட்டில் பேசிய அவர், தொழில் முனைவோர்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.
அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது பதிவு செய்ய தேவையில்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்” என்றார்.