Categories
தேசிய செய்திகள்

சொத்திற்காக தந்தை கொலை….. மகனின் கொடூரச் செயல்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

சென்னையில் சொத்திற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் குமரேசன் என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்தநிலையில் குமரேசன் மூத்த மகளான காஞ்சனா மாளாவின் கணவர் இறந்து விட்டதால் தான் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் காஞ்சனாவுடன் வசித்து வந்தார். அவரது மகன் குணசேகரன் தரைத்தளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும் சென்னை வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கின்றது.

இந்த வீடுகளை வாடகைக்கு விடுவதன்  மூலமாக மாதம் தோறும் இரண்டரை லட்சம் ரூபாய் வந்திருக்கின்றது. இந்த நிலையில் தனது ஓய்வு ஊதியம் மற்றும் வாடகை பணத்தை வைத்து குமரேசன் தனது மகள்களுக்கு செலவு செய்து வருவதால்  மகன் குணசேகரன் தனது தந்தை மீது மிகுந்த கோபத்தில் இருந்திருக்கின்றார். இந்த நிலையில் காஞ்சனமாளா  கடந்த 15ஆம் தேதி வெளியே சென்றபோது வீட்டில் குமரேசன் தனியாக இருந்திருக்கின்றார். அந்த நேரத்தை பயன்படுத்தி ஆத்திரத்தில் தந்தையை கொடூரமாக டிரம்மில் அடைத்து அதில் உப்பினை கொட்டி மகன் குமரேசன் கொலை செய்ததாக  கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து காவிரி பாளையத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குணசேகரன் வாங்குவதாக கூறி  நிலத்தை பார்வையிட்டு இருக்கின்றார்.

அப்போது வெங்கடேசனிடம் தனக்கு சூனியம் வைத்து இருப்பதாகவும், அதனை மந்திரவாதிகளின் உதவியோடு எடுத்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்திருப்பதாகவும் புதிதாக வாங்கும் இடத்தில் இதனைப் புதைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் பெருமாளின் உதவியோடு காவேரிபாக்கம் தஞ்சை நகரில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 19ஆம் தேதி பட்டப்பகலில் அந்த டிரம்மை புதைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தனது தந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த காஞ்சனமாளா  சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியபடி அங்காங்கே ரத்தக் கறைகள் இருப்பதை கண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் குணசேகரனின் மனைவியான வசந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 18ஆம் தேதி காவிரிபாக்கத்திலுள்ள வெங்கடேசனை சந்திக்க  சென்றதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசாரின் உதவியுடன் பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் தனக்கு சூனியம் வைத்து இருப்பதால் அதனை மந்திரவாதியின் உதவியுடன் எடுத்து டிரம்மில் அடைந்திருப்பதாகவும் அதைத்தான் வாங்கப் போகும் இடத்தில் புதைக்க வேண்டும் எனவும் கூறி இந்த இடத்தில் குணசேகரன் புதைத்ததாக தெரிவித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட குமரேசனின் உடலை  சென்னையில் உள்ள காவேரிப்பாக்கத்திற்கு எடுத்துவந்த டாட்டா ஏசி ஓட்டுநர் திருமூர்த்தி நில உரிமையாளர், ஆடு மேய்ப்பவர் வெங்கடேசன் பெருமாள் போன்றோர் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியுள்ளனர். இதனையடுத்து  நிமிலி வட்டாட்சியர் ரவி, வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மகேந்திரன் மற்றும் தீபா காவல் ஆய்வாளர் ஆபிரகாம் புரூஸ்  முன்னிலையில் புதைக்கப்பட்ட குழி தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மேலும் தலைமறைவாக இருக்கும் குணசேகரனை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Categories

Tech |