Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சொத்துக்களை பேரனிடம் சேர்த்துவிடுங்கள்” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் கோபாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், கண்ணபிரான் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கண்ணபிரான் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோபாலசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கோபாலசுவாமி எழுதிய கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கண்ணபிரானுக்கு பெங்களூரைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. என் மகனுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் எனது மகனுடன் ஏற்பட்ட தகராறில் வித்யா கோபத்தில் அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தியும் வீட்டிற்கு வர மறுத்துவிட்டார். எங்களது பேரக் குழந்தையை பார்க்கவும் கொஞ்சவும் அனுமதிக்கவில்லை. எங்களது மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது சொத்துக்களை ஆசிரமத்திற்கு எழுதி வைத்திருக்கிறோம். அதனை 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு எங்களது பேரனிடம் சேர்த்து விடுங்கள் என கோபாலசாமி கடிதத்தில் எழுதியுள்ளார்.

Categories

Tech |