Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பிகள்….. மதுரையில் பரபரப்பு….!!!!

சொத்துக்காக அண்ணனை தம்பிகளே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டியில் மூர்த்தி தங்கம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடைய மகன்கள் காசிராஜா, விருமாண்டி, ஐகோர்ட்டு ராஜா, கார்த்திக் ராஜா ஆகும். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூர்வீக வீடு தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விருமாண்டி தனது குடும்பத்துடன் சொக்கனூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு கார்த்திக் ராஜாவும் ஐகோர்ட்டு ராஜாவும் தனது நண்பனான சரத்குமார் உடன் சேர்ந்து மது அருந்திவிட்டு கரிசல்பட்டியில் உள்ள பூர்வீக வீட்டுக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் ஐகோர்ட்டு ராஜா அண்ணனான விருமாண்டியை சொத்து சம்பந்தமாக பேச வருமாறு போனில் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் சொக்கனூரில் இருந்து விருமாண்டி கரிசல்பட்டிக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் கார்த்திக் ராஜாவும் ஐகோர்ட் ராஜாவும் தனது நண்பனுடன் சேர்ந்து பூர்வீக வீடு சம்பந்தமாக தனது தாய் தங்கமாளிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை கண்ட விருமாண்டி தனது தம்பிகளை தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தம்பிகள் உள்பட 3 பேரும் அண்ணனான விருமாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சொக்கனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விருமாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து தப்பி ஓடிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை தம்பிகளே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |