அதிமுக முன்னாள் அமைச்சர் நரேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
அதன் அடுத்தகட்ட விசாரணை வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே வழக்கு மூன்று நீதிபதிகள் மாற்றப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரியும் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவானது நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற நீதிபதியின் விசாரணை தொடரும் என்று உத்தரவிட்டனர். ஆனால் மூன்றாவது நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.