Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சொத்துத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை

மன்னார்குடி அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் காவல் துறையினர், இந்தக் கொலை சொத்து தகராறில் நடந்திருக்காலம் எனக் கூறுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள பாலையூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி குபேந்திரன்(46). இவர் தனது மனைவி வனஜாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவி வனஜா குடும்பத்திற்கும் குபேந்திரனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்பாடுகிறது.

இந்நிலையில், பக்கத்து தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு குபேந்திரன் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது சொத்துத் தகராறு தொடர்பாக இரு தரப்பினரிடையே நேற்று சமரசம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வழக்கம் போல் நேற்று விடியற்காலையில் குபேந்திரனின் தந்தை காளிமுத்து, வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றபோது அங்கு தனது மகன் குபேந்திரன் ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்த தகவலறிந்த பெருகவாழ்ந்தான் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் உயிரிழந்த குபேந்திரனின் தலை, கை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அதிகளவில் ரத்தம் வெளியேறி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து குபேந்திரன் கொலை செய்ப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவரும் காவல் துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியோடு ஆதரங்களை சேகரித்து கொலையாளியை வலைவீசி தேடிவருகின்றனர். சொத்துத் தகராறில் குபேந்திரன் மனைவியின் குடும்பம்தான் அவரை அடித்துக்கொன்றதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |