உடையார்பளையத்தில் சொத்துத் தகராறில் தந்தையை மகன் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது சொத்தில் சரிபாதியாக பிரித்து இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து மூத்த மனைவியின் மகன் மேகநாதனுக்கும் அவரது தந்தை சுப்பிரமணியன் இருவருக்கும் இடையில் இடப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் மேகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து சுப்பிரமணியனை தாக்கியுள்ளார்கள். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் உடையார்பாளையத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.