Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்துவரி: அவங்க அதிகரிக்கவே சொல்லல…. எடப்பாடி ஓபன் டாக்…..!!!!!!

தமிழ்நாடு சட்டப்சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். மத்திய அரசு சொத்துவரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், வரி வசூலிப்பதற்கான பொருத்தமான செயல்பாட்டுடன் கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் கூறியுள்ளது. எந்த இடத்திலும் சொத்துவரி அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிடவில்லை. எனினும் ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து வாக்களித்த மக்களுக்குப் பரிசாகச் சொத்துவரியை அதிகரித்துள்ளார்கள். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையை உணர்ந்து அதிகரிக்கப்பட சொத்து வரியைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்திருக்கின்றோம். ஆகவே நாங்கள் வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று  அவர் தெரிவித்தார்.

மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, எடப்பாடிபழனிசாமி அளித்த பதில்கள், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் வரிகுறைவு என தெரிவித்துள்ளது தொடர்பாக உங்கள் கருத்து என்ன..?  இதற்கு பதிலளித்த எடப்பாடி, டெல்லி தொடர்பாக அவர் குறிப்பிடவில்லை. மும்பை, கொல்கத்தா, நாசிக் ஆகிய நகரங்களைத்தான் குறிப்பிட்டார். டெல்லியில் சொத்துவரி மிகவும் குறைவு. அங்கு சில விதிமுறைகளை விதித்துள்ளனர். சொத்து வரியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தினால் 15 % குறைத்துக் கொள்கிறார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 % வீட்டு வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளனர். ஆகவே டெல்லியில் வீட்டுவரி மிக மிகக் குறைவு ஆகும். அதை அமைச்சர் கோடிட்டுக் காட்டவில்லை, மற்ற நகரத்தைத்தான் குறிப்பிட்டார்.

அதன்பின் சொத்துவரியை உயர்த்தவில்லையெனில் உள்ளாட்சிகளுக்கு நிதி கிடைக்காது என அமைச்சர் குறிப்பிடுகிறாரே? அதாவது, அதிமுக. ஆட்சியில் இருக்கும் போதே 2018ஆம் வருடம் சொத்துவரியை உயர்த்தவேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்தது. அந்த சமயத்தில் கூட நாங்கள் குழுவைஅமைத்து மக்கள் பாதிக்கக்கூடாது எனும் நோக்கில் சொத்துவரியை அதிகரிக்கவில்லை. ஆகவே மக்களின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய அரசுதான் உண்மையான அரசு ஆகும். அவ்வாறு உண்மையான அரசாக அதிமுக அரசு செயல்பட்டது. இன்றைக்கு மக்கள்விரோத ஆட்சியிலே சொத்து வரி அதிகரித்தது கண்டனத்திற்குரியது ஆகும். மக்கள்மீது திமுக அரசு மிகப்பெரிய சுமையினை சுமத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |