Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துவரி: ஆன்லைன் மூலம் செலுத்துவோருக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொது சீராய்வு அறிவிப்புகள் தபால்துறை வாயிலாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. சென்ற மாதம் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்களுக்கு பொதுசீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டு உள்ளது. முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது பொது சீராய்வின் அடிப்படையில் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் அடிப்படையில் சீராய்வு அறிவிப்புகளில் டினி.யூஆர்எல் மற்றும் க்யூ.ஆர். கோடு போன்ற வழிமுறைகளும், வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சொத்து வரியினை எளிதாக செலுத்தும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலரின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன், பற்று அட்டை வாயிலாக மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை பெற்றுக் கொள்ளலாம். அதன்பின் பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in) வாயிலாக எந்த வித பரிமாற்ற கட்டணமின்றி சொத்துவரி செலுத்தலாம். அத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் வாயிலாக நேரடி முறையில் பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம். நம்மசென்னை மற்றும் பே.டி.எம் செயலியின் வாயிலாகவும் சொத்துவரி செலுத்தலாம். அதனை தொடர்ந்து பி.பி.பி.எஸ்.’ (பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்) வாயிலாகவும் சொத்து வரி செலுத்தலாம்.

மண்டல, வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் சொத்து வரி செலுத்தலாம். பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் இப்போது சொத்து வரியினை ஆன்லைன் வாயிலாக செலுத்தும் பட்சத்தில் குறிப்பிட்ட வங்கிகள் நிபந்தனைகளுக்குட்பட்டு பரிசு கூப்பன்கள், குறிப்பிட்ட சதவீதம் பணச்சலுகை மற்றும் திரைப்பட நுழைவுச்சீட்டு ஆகிய சலுகைகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆகவே சொத்து வரி பொது சீராய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியினை சொத்து உரிமையாளர்கள், அதற்கென ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளில் செலுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

Categories

Tech |