Categories
மாநில செய்திகள்

சொத்துவரி: இன்று நள்ளிரவு 12 மணி வரை அவகாசம்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (இன்று) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்று 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்தலாம். நேற்று வரை ரூ.730 கோடி சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதற்கு இன்று இரவு 8 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |