Categories
மாநில செய்திகள்

‘சொத்துவரி உயர்வு; மத்திய அரசே காரணம்’….. அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% சொத்துவரி உயர்கிறது. 600 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களுக்கு 75% சொத்துவரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம். 1801 சதுர அடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சொத்து வரி உயர்வை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவில்லை எனில் தமிழகத்திற்கு தரவேண்டிய 15 ஆயிரம் கோடியை வழங்கமாட்டோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் வரி உயர்த்தப்பட்டது அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்படுகிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற இந்த உயர்வு அவசியம். நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Categories

Tech |