Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…. கண்டன ஆர்ப்பாட்டம்…. அ.தி.மு.கவினர் கோரிக்கை….!!

தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழத்தில் சொத்துவரியை உயர்த்தியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதிலும் நடைபெற்றுள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது, விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பெண்களுக்கான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குபோட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலிறுத்தியுள்ளார்.

இந்த ஆர்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி முத்தையா, சதன்பிரபாகர், மாவட்ட இணை செயலாளர் கவிதாசசிக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சரவணகுமார், ராம்கோ தலைவர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |