Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்துவரி” நோயை தீர்க்கும் கசப்பான மருந்து…. சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு….!!!!

தமிழக அரசு 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, நோய் தீர்க்கும் மருந்து எப்படி கசப்பாக இருக்கும் அப்படித்தான் பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வை பார்க்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு 5 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் நாளொன்றுக்கு 20 கோடி வட்டி கட்ட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர் மக்கள் மீது எந்த சுமை வந்தாலும் அதற்கு முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |