Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு… அண்ணன் மகன் முகத்தில் ஆசிட் வீச்சு… சித்தப்பா கைது…!!!

கேரள மாநிலம், கண்ணூர் அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணன் மகன் முகத்தில் சித்தப்பாவே ஆசிட் ஊற்றி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் அருகே பேராவூர் பகுதியை சேர்ந்த பிஜு என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ஊரில் உள்ள குளத்திற்கு குளிக்க ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கற்களை வைத்து தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இறங்கி போய் யார் இதை செய்தார்கள் என்று பார்க்கச் சென்றபோது அவரது சித்தப்பா மாங்குழி ஜோஸ் மற்றும் அவரது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து அவரது முகத்தில் ஆசிட் ஊற்றி உள்ளார். மேலும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு விடாமல் தடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.

ஜீப்பின் இருக்கையில் ஆசிட் சிந்தியிருந்ததால், அக்கம்பக்கத்தினர் மற்றொரு வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கை, முகம், கண் போன்றவற்றில் காயம் ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக கோழிக்கூடு தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவே வழக்கு பதிவு செய்த அவர்கள் மாங்குழி ஜோஸை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரையும் கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாகவே ஆசிட் ஊற்றி கொலை முயற்சி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |