சொத்து தொடர்பான தகராறு விவசாயியை குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நாயுடுபாளையம் பகுதியில் செந்தில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி செந்தில் முருகன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன் பின் அவர் மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கடேஷ் செந்தில் முருகனை வழிமறித்துள்ளார்.
இதனை அடுத்து வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில் முருகனை பலமாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செந்தில் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய வெங்கடேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.