சொத்துத் தகராறினால் மருமகனை மாமியார் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞரான கபில் பவார் என்பவருக்கும் அவரது மாமியார் சிம்லா பவார்க்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மாமியார் மருமகன் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் தனது மருமகனை சொத்துக்காக மாமியார் கொலை செய்ய முடிவெடுத்தார். இதனால் ஹர்ஷ் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து தனது மருமகனை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார். 10 லட்ச ரூபாய் என்றதும் சந்தோசமடைந்த ஹர்ஷ் வழக்கறிஞரை கொலை செய்ய ஒப்புக் கொண்டு கபில் பவாரை மது அருந்துவதற்காக ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றார்.
அங்கு வைத்து அவருக்கு விஷம் கலந்த சைடிஷ் சாப்பிடக் கொடுத்தார். இதனால் மயங்கி விழுந்த கபில் பவாரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அதனை காணொளியாக பதிவு செய்து சிம்லாக்கு காட்டினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாமியார் 10லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் ஹர்ஷ்க்கு கொடுத்தார். கபீல் பவரை காணாமல் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரது மாமியார் தான் கொலை செய்தார் என்பது உறுதியானது எனவே சிம்லாவை காவல்துறையினர் கைது செய்தனர்.