Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறை தவிர்க்க….. “குடும்ப சபை” அமைக்க அம்பானி முடிவு…. வெளியான தகவல்….!!

எதிர்காலத்தில் சொத்து தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக முகேஷ் அம்பானி அவர்கள் குடும்ப சபை அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் நான்காவது பணக்காரரும், இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை உருவாக்கி அடுத்தடுத்து பல அதிரடி செயல்களை மேற்கொண்டு வரும் ஜியோ ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி மிகப்பெரிய உச்சத்தை தொட்டு விட்டார்.

இந்நிலையில் இவர் சேர்த்து வைத்த பெயர், செல்வாக்கு, செல்வம் என அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு சரியாக நீடிக்க வேண்டும் என்பதால், அம்பானி அவர்கள் குடும்ப சபை அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை அவரது பிள்ளைகளான ஆகாஷ், ஈஷா மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு பிரித்து வழங்க சபை ஏற்படுத்தப்படும். மேலும் எதிர்காலத்தில் சொத்து தகராறு வராமல் இருக்க இந்த ஏற்பாடு உதவும் என்றும் கூறப்படுகிறது. 

Categories

Tech |