Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொத்து தரல… அதனாலதான் இப்படி பண்ணேன்… குழந்தை என்றும் பாராமல் பெரியம்மா செய்த காரியம்..!!

சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சுமார் 1.30 மணி அளவில் ஒரு பெண் சிறுமியைத் தூக்கிச் செல்வதும், திரும்பி வரும்போது அந்தப் பெண் மற்றும் வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் கோபிகாவை தூக்கி சென்றது காந்தியின் அண்ணன் மனைவியான ராணி என்பது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ராணி சொத்து தகராறு காரணமாக தான்தான் குழந்தையை தூக்கி சென்று கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பலமணிநேரம் கிணற்றுக்குள் இறங்கி தீயணைப்புத்துறையினர் குழந்தையை தேடினர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்த காரணத்தினால் குழந்தை மீட்க முடியவில்லை. இதனால் மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி குழந்தையை மீட்டு எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து குழந்தையை கொலை செய்த ராணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |