Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்து தான் முக்கியம்…! அண்ணனோ, அண்ணியோ இல்லை… சேலத்தில் பரபரப்பு சம்பவம் ..!!

எடப்பாடியில் சொத்து விவகாரத்தில் சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற மைத்துனர் போலீசாருக்கு அஞ்சி அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள முப்பனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். நெசவு தொழிலாளி இவரின் மனைவி மாதேஸ்வரி. அதே பகுதியில் கோவிந்தனின் தம்பி வசித்து வருகிறார். கோவிந்தனுக்கும் அவரது தம்பி அண்ணாதுரைக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக 10 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை மாதேஸ்வரி கடைக்கு சென்றபோது. சொத்துக்காக அவரை வழிமறித்த அண்ணாதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.திடீரென ஆத்திரமடைந்த அண்ணாதுரை சொந்த அண்ணி என்றும் பார்க்காமல்.

தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டுயத்தில் பலத்த காயமடைந்த மாதேஸ்வரி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அங்கிருந்து சென்ற அண்ணாதுரை போலீஸ்க்கு அஞ்சி விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். எடப்பாடி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்துக்காக சொந்த அண்ணியை கொன்ற மைத்துனர் போலீஸ்க்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் எடப்பாடி அருகே பரபரப்பு ஏற்படுத்தியது.

Categories

Tech |