Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு….. தம்பியை அடித்து கொன்ற அண்ணன்…. பயங்கர சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணாநகர் பகுதியில் எலக்ட்ரீசியனான சஞ்சீவி காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சீவிக்கு நாகராஜ் என்ற தம்பி இருந்துள்ளார். நாகராஜுக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பரம்பரை சொத்தை பிரித்து தருமாறு சஞ்சீவி தனது தம்பி நாகராஜுடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது கோபமடைந்த சஞ்சீவி தனது தம்பியின் மார்பு பகுதியில் அடித்ததால் அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சஞ்சீவியை கைது செய்தனர். ஏற்கனவே நாகராஜ் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |