லாரி ஏற்றி வாலிபரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நக்கனேரி கிராமத்தில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவசகாயம், கிரப் என்ற மகன்கள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிரப் என்பவருக்கு பிரித்திவி(32) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவசகாயத்திற்கும், பிரித்திவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரித்திவி தேவ சகாயத்தை தாக்கியுள்ளார். இதனை அறிந்த தேவ சகாயத்தின் மகன் சிவரங்கராஜன் லாரியை வேகமாக ஓட்டி சென்று வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த பிரித்திவி மீதி ஏற்றி கொலை செய்ய முயன்றார்.
இந்நிலையில் லாரி வருவதை பார்த்ததும் பிரித்திவி தவறி கீழே விழுந்தார். அப்போது லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியதால் சுவர் இடிந்து பிரித்திவி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் காயம் அடைந்த சிவரங்கராஜன் மற்றும் தேவ சகாயம் ஆகியோருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.