தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது சொத்து வரி உயர்வுக்கான சரியான காரணம் குறித்த விளக்கத்தை முதல்வர் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, சொத்து வரி உயர்வை இந்த அரசு முழு மனதுடன் செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்ற காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு இந்த வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தான் உள்ளாட்சி தேர்தல் முடிந்து அனைவரும் பொறுப்பேற்றுள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்ய நினைப்பார்கள். அவ்வாறு கடமையைச் செய்ய அரசிடமிருந்து நிதியை எதிர்பார்ப்பார்கள். எனவே அதனை ஈடு செய்யவே இந்த சொத்துவரி அமலுக்கு வந்துள்ளது. அரசு செய்யும் மக்கள் நல பணிகளுக்கும் நலத் திட்டங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தோள் கொடுத்து நிற்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மாநில வளர்ச்சியில் அரசின் செயல்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.