சொத்து வரி உயர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்து வரி உயர்வை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நிராகரிக்கபட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.