Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு… தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!!!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள் கல்வி நிலையங்கள் என அனைத்திற்குமான சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு அண்மையில் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் மற்றொரு  அதிர்ச்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைக்கான வரியும்  100 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் காலிமனை வரி விதிப்பை பொறுத்தவரை 100 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே சமயம் சொத்துவரி சீராய்வு பணிகள் முடிந்து வழக்கமான முறையில் வரி விதிப்புகள் செய்திட மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை கட்டட அனுமதி விண்ணப்பம் செய்பவர்களின் நலனைகருதியும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வருவாய் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் காலிமனை வரி விதிக்க கோரி புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களை உரிய விதிகளை பின்பற்றி பரிசீலனை செய்து பல்வகை ரசீது வைப்பதாக தற்காலிகமாக வழங்க வேண்டுமெனவும், சீராய்வு பணிகள் முடிவடைந்த உடனே புதிய வரி விகிதங்களின் படி  வசூல் செய்ய வேண்டும்.

அவ்வாறு கணக்கீடு செய்து வரிகளை விதிக்கும் போது கேட்பு  தொகையை ஏற்கனவே வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்ட தொகையுடன் ஈடு செய்ய வேண்டும். எனவே சொத்து வரிக்கான  சீராய்வு பணிகள் நிறைவடைந்த உடனே புதிய  வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் கலிமனைகளுக்கான  சொத்துவரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |