சொத்துவரியை உயர்த்தியதற்காக திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பாக, திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் திமுக ரத்து செய்ததற்காக போராட்டத்தை நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகிரி தலைமை தாங்கினார். அவர் சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக ரத்து செய்ததை கண்டித்தும் உரையாற்றினார். இப்போராட்டத்தில் எம்.எல்.ஏ.செந்தில்குமார், அமைப்புச் செயலாளர் மோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் அழகுவேல், பாபு, பிரபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியில் அதிமுக பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு திமுகவிற்கு கண்டனத்தை தெரிவித்தனர்