Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு: விலை நிர்ணயம் என்ன?…. இதோ முழு விபரம்…!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தமிழகத்தை விமர்சித்து வந்தனர். அவற்றிற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகும் அது இந்தியாவின் பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது என விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதைக் குறிப்பிடும்போது அரசு தரப்பில் சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி குடியிருப்புக்கு குறைந்தபட்சம் சொத்துவரியாக 1,215 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதும், இதே பரப்பளவுள்ள குடியிருப்புக்கு மும்பையில் 2,157 ரூபாயும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3,464 ரூபாயும், கொல்கத்தாவில் 3,510 ருபாயும் வசூலிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

புதிதாக வரையறை செய்யப்பட்டு உள்ள இந்த சொத்துவரிக்கான சீராய்வு 2022-23 ஆம் வருடத்தின் முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசின் இந்த ஒப்பீட்டை அடிப்படையாக வைத்து பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்துவரி எவ்வாறாக இருக்கிறது மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் மற்ற மாநிலங்களில் சொத்துவரி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்சம் சொத்துவரி 810 ரூபாயில் இருந்து 1215 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பின் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்சம் சொத்துவரியாக

# மும்பை – ரூ. 2,257

# பெங்களூர் – ரூ. 3,464.064

# கொல்கத்தா – ரூ. 3,510

#புனே – ரூ. 3,924.6 வசூலிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டிடத்திற்கு அதிகபட்சம் சொத்துவரி 3,240 ரூபாயிலிருந்து 4,860 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. பின் இதே பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு,

# பெங்களூர் – ரூ.8,660.16

# கொல்கத்தா – ரூ.15,984

# புனே – ரூ.17,112.6

# மும்பை – ரூ. 84,583.8 வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |