Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டிக்கிறோம்…. பா.ஜ.க கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!!

பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசினார்.

அதாவது, தமிழகத்தில் சொத்து வரி உயர்வினால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சொத்து வரியை குறைப்பதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான  பதிலடி வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைக்கும். ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க பிரமுகரை  காவல்துறையினர் கைது செய்தது மிகப்பெரிய குற்றமாகும். இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 12-ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

Categories

Tech |