மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தலைமை தபால் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தி திணிப்பு மற்றும் மத்திய அரசின் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, முன்னாள் எம்.பி பெல்லார்மின், செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன் அந்தோணி, உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.