சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் கேளிக்கை வரி 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இந்த 2021-22 ஆம் நிதியாண்டில் சொத்து வரி, தொழில் வரி மற்றும் இதர வரி என மொத்தம் 1,297 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 338 கோடி அதிகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அதன்படி சென்னையில் இருக்கும் ஒரு திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டது.
அதன்பிறகு தியேட்டர் உரிமையாளர் ரூபாய் 65 லட்சம் வரி செலுத்தினார். இந்த வரி பாக்கி செலுத்துவதற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்துவோருக்கு 5 விழுக்காடு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வரி நிலுவைத்தொகை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் சென்னை மேயர் பிரியா ராஜனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் சென்னையில் 600 முதல் 1200 சதுர அடிக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடிக்கு 100 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் 150 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.