சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியை நாளைக்குள் செலுத்துவோருக்கு 5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி , கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக செலுத்தமுடியும். 2022 23 ஆம் ஆண்டு முதல் அரையாண்டு சொத்து வரியிணை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்திவந்த கட்டண விகிதத்திலேயே வரும் 16ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் நாளைக்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், தவறும் நபர்களுக்கு 2% அபராத தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.